• vilasalnews@gmail.com

வ.உ.சி.நினைவு தினம் : சிலைக்கு தூத்துக்குடி தெற்கு பகுதி கழக அமமுக வினர் மாலை அணிவிப்பு

  • Share on

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி யின் 84 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி யில் உள்ள அவரது சிலைக்கு, அமமுக தூத்துக்குடி தெற்கு பகுதி கழக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வ.உ.சி அவர்களின் 84 வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து , இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், ஆங்கிலேயரை எதிர்த்து முதன்முதலாக கப்பலோட்டிய தமிழருமான, “செக்கிழுத்த செம்மல்” வ. உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை ( 18 நவம்பர் 1936 ) முன்னிட்டு இன்று , தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகம் முன்பு உள்ள வ. உ. சிதம்பரனாரின் திருஉருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தூத்துக்குடி தெற்கு பகுதி கழக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், 58 வது வார்டு வட்ட செயலாளர் முள்ளக்காடு ராஜ்குமார், 52 வது வார்டு வட்ட செயலாளர் சேகர், 53 வது வார்டு வட்ட செயலாளர் ரத்தின வேல் குமார், 57 வது வார்டு வட்ட செயலாளர் ராமர், மாணவரணி பகுதி செயலாளர் வினோத் குமார், அம்மா தொழிற்சங்க பகுதி செயலாளர் சுடலையாண்டி என்ற செல்வம், பகுதி துணைச் செயலாளர்கள் பாலு அதிபன், பரமசிவம், ஊராட்சி செயலாளர் தனராஜ், வட்ட பிரதிநிதி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை - எஸ்பி தகவல்

தூண்டில் வளைவு, கடல் அலை அரிப்பு சுவர் நீட்டிப்பு பணிகளுக்கான பூமி பூஜை : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

  • Share on