இசை மாமேதை நல்லப்ப சுவாமிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இசை மகாசமுத்திரம் என்று மாபெரும் இசை மேதைகளாலும் அறிஞர்களாலும் போற்றப்பட்ட விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள், விடுதலைப் போராட்ட வீரரும் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் உறவினரான காடல்குடி பாளையக்காரரின் வழிவந்தவர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சோமசுந்தர ஜெகவீர கஞ்செய பாண்டியன் - கோவம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 24.09.1889இல் பிறந்தார். இன்று செப்டம்பர் 24ஆம் தேதி 135 ஆவது பிறந்தநாள் விழா அவருக்கு கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து, விளாத்திகுளத்தில் உள்ள அவரது திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், வார்டு செயலாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.