டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் இரஞ்சன், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் கருப்பசாமி பாண்டியன், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் அந்தோணிதாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி சுடலை ஆண்டி, ஆறுமுகநேரி பேரூர் செயலாளர் இராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி அனிஸ்டன், செல்வகுமார், உடன்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.