• vilasalnews@gmail.com

காய்கறி ஏற்றி வந்த லோடு வேன் கவிழ்ந்து விபத்து

  • Share on

சாத்தான்குளம் அருகே காய்கறி ஏற்றி வந்த லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீ மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது லோடு வேன் டிரைவர் திசையன்விளையைச் சேர்ந்த மோகன்ராஜ் நேற்று திசையன்விளையில் இருந்து காய்கறிகளை லோடு வேனில் ஏற்றி கொண்டு சாத்தான்குளம் நோக்கி வந்தார். 

சாத்தான்குளம் அருகே அடப்புவிளை பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்தவர்கள் விரைந்து வேனில் சிக்கிய டிரைவரை காப்பாற்றினர். வேனை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பானது. இந்த விபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியர் இறப்பு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

  • Share on