• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியர் இறப்பு

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தில் காயமடைந்த மின்வாரிய ஊழியர் இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கொடியங்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 51). இவர் கடம்பூர் துணை மின்நிலையத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை 22-ந் தேதி ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் ஆய்வாளர் தர்மர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

கோவில் உண்டியல் உடைப்பு - 2 பேர் கைது

காய்கறி ஏற்றி வந்த லோடு வேன் கவிழ்ந்து விபத்து

  • Share on