எப்போதும்வென்றான் அருகே பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடிய வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே அருங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் (66) என்பவரது மகள் நேற்று (22.09.2023) வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சிவநந்தன் மகன் சோனுகுமார் (22) என்பவர் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடி சென்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து சோனுகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 70,000 மதிப்புள்ள 2 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார்.