தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டபத்தில் ஒரு வார காலம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை ஐந்தாம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக சிறப்பு விநாயகர் பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக. இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் கலந்து கொண்டார். விழாவில், மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், பிஜேபி ஆன்மிக பிரிவு ஓ.எம். பிரபு, ரவீந்திரன், மற்றும் ஆதிநாத ஆழ்வார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.