தூத்துக்குடி மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல் செய்யும் பணியில் மாநகராட்சி களம் இறங்கியுள்ளது.
மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் தலைமையில் வருவாய் பிரிவினர் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதில் அரசு கட்டடங்கள் கூட மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. பலமுறை சொத்து வரியை கட்ட சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளதால் அதிரடியில் இறங்க மாநகராட்சி முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் அலுவலகம் எட்டயபுரம் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு சொத்துவரி பாக்கி பல லட்ச ரூபாய் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் தலைமையில் வடக்கு மண்டல உதவி ஆணையர் தனசிங் மற்றும் வருவாய் பிரிவு அலுவலர்கள், பணியாளர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்லும் மாநகராட்சி குடிநீர் இணைப்பை துண்டிப்பு செய்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது