• vilasalnews@gmail.com

தூத்துக்குடி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிதிநிறுவனத்தில் ரூ. 53 லட்சம் மோசடி - 3 பேர் கைது

  • Share on

தூத்துக்குடி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி தனியார் நிதிநிறுவனத்தில் ரூபாய் 53 லட்சம் மோசடி செய்த 3 பேரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தை சேர்ந்த அய்யாசாமி மகன் முத்துராஜா (எ) முத்துராஜ் (45) என்பவர்  தூத்துக்குடி கீழுர் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணி செய்தபோது, மேற்படி கூட்டுறவு வங்கியின் காசோலைகளை முறைகேடாக பயன்படுத்தி, அவருக்கு தெரிந்த தூத்துக்குடி அழகேசபுரம் மெயின்ரோடு, பொன்நகரம் பகுதியை சேர்ந்த  மகாராஜன் மகன் பரமசிவன் (50) மற்றும் தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்;த சுப்பிரமணியன் மகன் சேதுராமலிங்கம் (53) ஆகியோருடன் கூட்டுசேர்ந்து திட்டம்போட்டு, தூத்துக்குடியை சேர்ந்த 22 நபர்களிடம் தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் சிறுதொழில் செய்வதற்கு கடன் தருவதாக கூறி, அவர்களிடம் அவர்களுக்கு உரிமையில்லாத மேற்படி முறைகேடான காசோலைகளில் கையெழுத்துக்களை பெற்றுள்ளனர். அவ்வாறு கையெழுத்து பெற்ற  22 காசோலைகளை தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த சின்னத்துரை மகன் ராஜா (33) என்பவருக்கு சொந்தமான பபிதா நிதி நிறுவனத்தில் உண்மையானது போன்றும், அதனுடன் மேற்படி 22 நபர்களின் ஆதார் கார்டு நகல்களையும் சேர்த்து மேற்படி நிதி நிறுவனத்தில் தாக்கல் செய்து கடனாக ரூபாய் 52,85,000 பணத்தை மோசடியாக பெற்று கைதான 3 பேரும் சுயலாபம் அடைந்தும், பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்தும், கடன் தொகையை திருப்பி கேட்ட மேற்படி நிதிநிறுவனத்தின் உரிமையாளரான ராஜாவிடம் கைதான 3 பேரும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மேற்படி ராஜா அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, முருகன் மற்றும் தலைமை காவலர் வேல்ராஜா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு, முத்துராஜா (எ) முத்துராஜ் என்பவரை திண்டுக்கல்லிலும்,  பரமசிவம் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோரை தூத்துக்குடியிலும் வைத்து நேற்று கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

ஊராட்சி தலைவி மீது புகார் - ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாய் விரித்து படுத்து உறங்கும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி

பல ஆண்டுகளாக ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதி இல்லை - எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்!

  • Share on