கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குமாரபுரம் ஊராட்சி மன்றம் 6-வது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் தலைமையில் அக்கட்சியினர் 3 பேர் தரையில் படுத்து உறங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவி, கிராம சபை தீர்மானத்தை மீறி செயல்படுவதை கண்டித்தும், ஊராட்சியில் சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும், பல வருடங்களாக அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதை கண்டித்தும், கிராம சபை கூட்டத்தில் கொடுக்கும் கோரிக்கைகளை பதிவு செய்ய மறுக்கும் தலைவி மற்றும் அதற்கு துணை போகும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் ராணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.