• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக பட்டா வழங்கி முறைகேடு - துணை வட்டாட்சியர், விஏஓ பணியிடை நீக்கம்

  • Share on

எப்போதும்வென்றான் கிராமத்தில் விதிகளுக்கு புறம்பாக பட்டா வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட ஓட்டப்பிடாரம் துணை வட்டாட்சியர்,  விஏஓ ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள அரசு சர்க்கார் மனை நிலத்தினை அரசின் விதிமுறைகளை ஏதும் பின்பற்றாமல் தன்னிச்சையாக வட்டக் கணக்கு மற்றும் நத்த நிலவரித்திட்ட தூயசிட்டா பதிவேட்டில் முறைகேடாக பதிவுகள் செய்து சுமார் ரூ.1.2 கோடி சந்தை மதிப்பிலான 40 சென்ட் நிலத்தினை விதிமுறைக்கு புறம்பாக நத்தம் பட்டா வழங்கியும், கிராம நிர்வாக அலுவகத்தில் வைக்கப்படவேண்டிய பதிவேட்டினை தனது வீட்டில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டும் மேற்படி முறைகேடான பட்டாவிற்கு தூயநகல் பட்டா வழங்கியும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியரும் எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வடிவேல்குமார் மற்றும் எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் கண்ணன் ஆகியோர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

  • Share on

ஒரு ஏக்கர் 68 செண்ட் நிலம் மோசடி - போலியான அரசாங்க முத்திரை தயார் செய்து உடந்தையாக இருந்தவர் கைது

திருச்செந்தூர் கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

  • Share on