தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில், மன்ற அலுவலகம் முன்பு, பொங்கலிட்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பங்கேற்று, பொங்கல் பானையில் அரிசியிட்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.
தமிழர் திருநாளான, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தின் முன்பு, பத்திரிக்கையாளர்கள் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொங்கல் பானையில் அரிசியிட்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை வழங்கி, பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறுபெருமாள், காவல்துறை செய்தி தொடர்பாளர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முக சுந்தரம் (தமிழ் முரசு), செயலாளர் இசக்கி ராஜா (நியூஸ் 7 ), பொருளாளர் செந்தில் முருகன் (லோட்டஸ் டிவி), இணைச் செயலாளர் சிதம்பரம் (நியூஸ் ஜெ) ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், மன்ற கௌரவ ஆலோசகர்கள் அருண் (ஜெயா டிவி), ஆத்திமுத்து (காலை தீபம்), செயற்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை (குமுதம் ரிப்போர்ட்டர்), அகமது ஜான் (தமிழ் அஞ்சல்), காதர் முகைதீன் (கலைஞர் டிவி), முரளி கணேஷ், (நியூஸ் 18) சதீஷ்குமார் (வசந்த் டிவி), பாஞ்சை கோபால்சாமி (நம் தினமதி), ராஜு (போலீஸ் டுடே ), இருதயராஜ் (நியூஸ் 18 தமிழ்நாடு), கண்ணன் (காலை தீபம்),
உறுப்பினர்கள் பிரபாகரன் (புதிய தலைமுறை), சாதிக் (தமிழ் அஞ்சல்)
பேச்சிமுத்து, (வின் டிவி), ரவி (தமிழன் டிவி), மாரிராஜா (ராஜ் டிவி), ஷேக் உமர் (ஆயுத எழுத்து), பாலா (இ பாரத் டிவி), மாரிமுத்து (தின தரணி),
வள்ளி ராஜ் (தமிழக நியூஸ்), கார்த்திக் (தின உதயம்), கருப்பசாமி, வெற்றிச்செல்வன், (புரட்சித்தலைவி), மாணிக்கம் (நமதுமுரசு), மணிகண்டன் (நவ்இந்தியர் டைம்ஸ்), சிவகுமார் (தினசங்கு), ராஜேந்திர பூபதி (உள்ளாட்சி சாரல்), நீதிராஜன் (மாலை நியூஸ்) உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.