• vilasalnews@gmail.com

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது? மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

  • Share on

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தை காணொளி வாயிலாக வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதையொட்டி அன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றார்.


இந்த நிலையில்,  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது:-


கடந்த ஆட்சியின் போதும் வெறும் 10 சதவீதம் மட்டுமே ஸ்மாட் சிட்டி அண்ணா பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிந்திருந்த நிலையில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கடந்த 1 1/2 வருடங்களில் மிக விரைவாக பேருந்து கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு,  வரும் செப்.,30 தேதி தமிழக முதல்வரால் காணொளி வாயிலாக திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த ஸ்மாட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி வரலாறுகளை பேசும் திருச்செந்தூர், குலசேகரபட்டினம், பனிமயமாதா திருகோவில்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்டவைகள் ஓவியங்களாக வரையப்படுகிறது. அண்ணா, கலைஞர் போன்றோரின் வாசகங்கள், தூய்மை திட்டம், தூத்துக்குடி வளர்ச்சி உள்ளிட்டவைகள் தொடர்பாக வாசங்களும் எழுதப்பட்டு அவைகள்  பராமரிக்கப்படும். எந்தெந்த பேருந்துக்கள் எந்தெந்த ஊர்களுக்கு செல்கின்றன என்ற விபரங்களோடு 29 பேருந்து நிறுத்த தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் நான்கு தளங்கள் கொண்ட இந்த பேருந்து நிலையத்தில் 100 கடைகள் உள்ளன. மேலும் 400 கார்கள்,  400 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும், பொதுமக்களுக்கு மேல் தளங்களுக்கு செல்ல லிப்ட் வசதியும் உள்ளது. 24 நேரமும் கடைகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையத்தை சுற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே இரண்டு மற்றும் நான்கு சங்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

  • Share on

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் - 2 வது முறை பொது மேலாளரை சந்தித்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை

தூத்துக்குடியில் வானத்தில் மிரட்டும் கருமேகக்கூட்டம் - மழை வெளுத்து வாங்க தயாராக உள்ளதா?

  • Share on