நெல்லையில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கடந்த மாதம் தென்னக ரயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், மீண்டும் அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, தென்னக ரயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார்.
திருநெல்வேலி- சென்னை இடையே வரும் 24-ம் தேதி முதல் ‘வந்தே பாரத்' ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் முதற்கட்டமாக விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நிலையில்,
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, தென்னக ரயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார். அப்போது நெல்லையில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ இரண்டாவது முறையாக தென்னக ரயில்வே பொது மேலாளரை நேரில் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.