• vilasalnews@gmail.com

புதூர் ஒன்றியத்தில் புதிய வகுப்பறை, பயணியர் நிழற்குடை - மார்கண்டேயன் எம்எல்ஏ., திறந்து வைத்தார்

  • Share on

புதூர் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் பயணியர் நிழற்குடையை மார்கண்டேயன் எம்எல்ஏ., இன்று திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதூர் ஊராட்சி ஒன்றியம் லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு  நிதியின் கீழ் ரூ 5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வுகளில், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திகேயன் , லட்சுமிசைவதுரை, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி, சுமதி, இம்மானுவேல், புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வெற்றிவேலன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்றாய பெருமாள், கிளைச் செயலாளர்கள் முத்துப்பாண்டி, குருராஜ், மாரியப்பன் ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

பசுவந்தனை அருகே தந்தை கண்டித்தால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை!

  • Share on