கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்த சமத்துவ பொங்கல் விழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்து அனைவருக்கும் பொங்கல் இனிப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்று அனைவருக்கும் பொங்கல் இனிப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோசப் சுரேஷ், பேராசிரியர்கள் பொன்னுலிங்கம், கதிரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஐகோர்ட் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிருபாகரன், ரஞ்சித், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டி, அன்புராஜ், தங்க மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.