ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு துறை மூலமாக தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சார்பில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
அப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பிரதிநிதி ராஜகுமாரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம், கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்