தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்தை, காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.எஸ். காமராஜ், ஜெயகொடி, தங்கராஜ், ஜாண் வெஸ்லி, அருணாசலம், செந்தூர்பாண்டி, பொன்பாண்டியன், மார்க்ஸ், பிரபாகர், கிருஷ்ணன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.