தூத்துக்குடி தனியார் கல்லூரி மாணவர்களுடைய ஏற்பட்ட மோதல் கோஷ்டி சண்டையாக மாறியது. இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே நேற்று கல்லூரிக்கு செல்லும் வழியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் மோதினர். இந்த மோதல் கோஷ்டி சண்டையாக மாறியதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டினர். இதில் தப்பி ஓடிய மாணவர்களை பிடித்து, சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.