• vilasalnews@gmail.com

தமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.17 கோடி மதிப்புள்ள புத்தர் சிலை - ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை!

  • Share on

சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவர், "நாகப்பட்டினத்தில் ராஜராஜபெரும் பள்ளி என்ற பெயர் கொண்ட சூடாமணி புத்த விகாரம் என்ற புத்தர் கோயில் உள்ளது. இந்த புத்தர் கோயில் சோழ மன்னர் ராஜராஜசோழன் 21வது ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ராஜராஜ பெரும்பள்ளி என தமிழ்மொழியில் பெயரிடப்பட்டு வழிபாட்டில் இருந்தது. இதை பராமரிப்பு செய்வதற்காக ஆனைமலை கிராமத்தில் இருந்து 97 வேலி நிலங்கள் கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரமானது ராஜராஜசோழனின் 23-வது ஆட்சி காலத்தில் 163வது நாள் பதிவு செய்யப்பட்டு புத்த கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டது.

ஜாவா, சுமத்திரா போன்ற இந்தோனேசியா தீவுகளை ஆட்சி செய்த சைலேந்திரா அரசன் சூடாமணிவர்மனால் இந்த ராஜராஜ பெரும்பள்ளி கட்டப்பட்டு அவரது மகன் மாறவிஜயதுங்கவர்மனால் கட்டி முடிக்கப்பட்டது. ராஜராஜசோழன் மறைவிற்கு பின்னர் அவரது மகன் ராஜேந்திரசோழன் தானமாக கொடுத்த 97 வேலி நிலத்தை இந்த புத்த கோயிலுக்கு இந்த பூமி இருக்கும் வரை சொந்தம் என உத்தரவிட்டார்.

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் இருந்த 5 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை கடந்த 2003ம் ஆண்டிற்கு முன்பு திருடப்பட்டுள்ளது. இந்த சிலையின் மதிப்பு ரூ.17 கோடி ஆகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த புத்தர் சிலை நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சிலை கடத்தல்காரர்களின் தலைவன் சுபாஸ்சந்திரகபூர் இந்த சிலையை வாங்கியுள்ளார். பழமைவாய்ந்த இந்த சிலையை சாலமன் என்பவர் புதுப்பித்து சிங்கப்பூரில் உள்ள ஏசியன் சிவிலிஷேன் மியூசியத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் காட்சிபொருளாக இருந்தது. பின்னர் அந்த சிலை திரும்பவும் சுபாஸ்சந்திரகபூர் நியூயார்க் நகருக்கு சென்றது. இந்த சிலை கடத்தலில் கபூர் சகோதரி சுஷ்மா என்பவர் மறைத்து வைத்துள்ளது தெரியவருகிறது.

நமது நாட்டின் பொக்கிஷமான இந்த சிலையை மீட்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. நீதிமன்றத்திற்கு கூட தெரிவிக்காமல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை உள்ளது. இந்த சிலை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த சஞ்சீவ் அசோகன் என்பவர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் கடத்தப்பட்ட சிலையை மீட்டு மீண்டும் சூடாமணி விகாரத்தில் நிறுவவேண்டும். புத்த திருமேனி சம்பந்தப்பட்ட உற்சவ திருவிழாக்களை நாகப்பட்டினத்தில் தொடங்க வேண்டும்" என்றார்.

  • Share on

நீங்க போஸ்டர் ஒட்டுனா... நாங்க வெடி வெடிப்போம்... தூத்துக்குடியில் பரபரக்கும் அதிமுக - பாஜக அரசியல் யுத்தம்

தூத்துக்குடியில் திமுகவில் மட்டும் தான் குடும்ப அரசியல் உள்ளதா? சசிகலா புஷ்பா கேள்வி!

  • Share on