தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 53 மற்றும் 54வது வார்டு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி, நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 53 மற்றும் 54வது வார்டு பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்