ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஒட்டப்பிடாரம் ஊராட்சிமன்ற தலைவரும் ஒட்டப்பிடாரம், வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக அரிசி, இனிப்பு, புத்தாடை மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.