• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளிக்கூட ஆசிரியர் விடுதலை

  • Share on

தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 50). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. 

இதனையடுத்து அவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது

இந்த வழக்கில் மாணவிகள் பாலியல் தொந்தரவு எதுவும் ஏற்படவில்லை என்று சாட்சி அளித்ததால், ஆசிரியர் பொன்ராஜை விடுதலை செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டு உள்ளார்.

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் - மாநில துணைத் தலைவர் பங்கேற்பு

தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேல்முறையீடு சிறப்பு முகாம் :அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு

  • Share on