• vilasalnews@gmail.com

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு

  • Share on

இரண்டு இரு சக்கரவாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை தெற்கு தெருவை சேர்ந்த மூக்கன் மகன் குருசாமி (வயது 40). இவர் எட்டயபுரத்திலிருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். எதிரே விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி காலனி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மேகவர்ண ராஜா (35) பைக்கில் வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். எட்டயபுரம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குசிகிச்சை பலனின்றி மேகவர்ண ராஜா இறந்தார். மேல் சிகிச்சைக்காக குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

பரோலில் வெளிவந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது

கோவில்பட்டியில் காரில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் - வாகன சோதனையில் சிக்கியது

  • Share on