• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விநாயகர் ஓவியம் வரைதல் போட்டி

  • Share on

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விநாயகர் ஓவியம் வரைதல் போட்டி நடைபெற்றது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்திபேரவை சார்பில் தூத்துக்குடி சிவன் கோவில் வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விநாயகர் ஓவியம் வரைதல் மற்றும் விநாயகர் படத்துக்கு வர்ணம் தீட்டுதல் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பள்ளிக்கூடங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் விநாயகர் உருவப்படத்தை வரைதல் மற்றும் வர்ணம் தீட்டுதல் போட்டிகளில் பங்கேற்று வரைந்தனர். இதில் சிறப்பாக விநாயகர் ஓவியத்தை வரைந்த மாணவ-மாணவிகளுக்கும், சிறப்பாக வர்ணம் தீட்டிய மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாள் - மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை

விளாத்திகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டிக்கிடந்ததால் பரபரப்பு

  • Share on