• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பெரியார் பிறந்த நாள் - மேயர் ஜெகன் பெரியசாமி மரியாதை

  • Share on

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தந்தை பெரியாரின் 145-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பாளை சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பெரியார் சிலை முன்பு சமூகநீதி நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது.


இதில், திமுக நிர்வாகிகள்,  மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விநாயகர் ஓவியம் வரைதல் போட்டி

  • Share on