தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகரின் முக்கிய இரண்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சீர் செய்யவும், குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டும் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நகரின் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு மற்றும் பழைய பேருந்து நிலையம் காய்கனி மார்க்கெட் சிக்னல் ஆகிய இரண்டு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.