• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா

  • Share on

எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் அண்ணாவின் 115 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, எட்டயபுரம் நகர  செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி  - கோவில்பட்டி மெயின்  ரோட்டில் டாக்டர்  எம்.பி.சந்திரன் நினைவு கொடி கம்பத்தின் முன்பு கட்சி கொடியேற்றப்பட்டு, அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ ராஜு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில், அவைத் தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கார்ட்டன் பிரபு, கருப்பசாமி, சின்னத்துரை, ஐஸ் முனியசாமி, எம்.ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜெயகுமார், மகளிர் அணி சுப்பலட்சுமி, செல்வி, சாந்தி, ரத்தினம் , இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி, புதூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, கோவில்பட்டி ஆவின் சேர்மன் தாமோதரன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,  முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கண்துடைப்புக்காக நடத்தப்படும் பகுதி சபா கூட்டம் வேண்டாம் - மாநகராட்சி மீதான அதிருப்தியில் கூட்டத்தை புறக்கணித்த 51வது வார்டு பொதுமக்கள்!

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

  • Share on