• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுக சார்பில் அண்ணா 115வது பிறந்த நாள் விழா : கனிமொழி எம்பி மரியாதை!

  • Share on



தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தி.மு.வை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி பாளைரோடு காய்கனி மார்க்கெட் சந்திப்பில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்எல்ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்!

பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் துரிதமாக செய்து கொடுக்கப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி

  • Share on