தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார் நேற்று (11.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைகுளம் கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான சரவணன் (எ) லோகேஸ்வரன் மகன் பூபேஷ் (20) மற்றும் சுப்பிரமணியன் மகன் ராகவன் (எ) ரகு (22) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் பூபேஷ் மற்றும் ராகவன் (எ) ரகு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.