• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் பாரதியாரின் 102-வது நினைவு தினம் - அதிமுக மாலை அணிவித்து மரியாதை

  • Share on

மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபம் மற்றும் அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள பாரதியாரின் சிலைக்கு, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ வின் ஆலோசனையின் பேரில், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, சின்னத்துரை, முத்துகிருஷ்ணன் , மகளிர் அணியினர் செல்வி, சாந்தி மற்றும் ஜெயகுமார் , மோகன், கார்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி அருகே கோழி திருடிய ரவுடி கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

  • Share on