தூத்துக்குடி அருகே கோழிகளை திருடிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
முத்தையாபுரம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமர் மகன் ராஜ்குமார் (36) என்பவருக்கு சொந்தமான 10 கோழிகளை கடந்த 21.08.2023 அன்று மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முத்தையாபுரம், ஜே.எஸ் நகரை சேர்ந்த மிக்கேல் மகன் சதீஷ்குமார் (24) என்பவர் மேற்படி ராஜ்குமாரின் தோட்டத்திற்குள் புகுந்து கோழிகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் சதீஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட கோழிகளில் 4 கோழிகளை பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.