• vilasalnews@gmail.com

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • Share on
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டு வேலைக்கான போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்  மேலும் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2021ம் வருடம் விளாத்திகுளம் பூசனூர் பகுதியை சேர்ந்த அருளப்பன் மகன் எபனேசர் (45) என்பவர் விளாத்திகுளம் வி. வேடப்பட்டி பகுதியை சேர்ந்த தாழைச்சாமி மகன் தாளமுத்து (31) என்பவரிடம் அறிமுகமாகி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியதை நம்பி மேற்படி தாளமுத்து என்பவர் எபனேசரிடம் ரூபாய் 40,000/- பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் மேற்படி எபனேசர் என்பவர் தாளமுத்துவுக்கு வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து மேற்படி தாளமுத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு  எபனேசரை கடந்த 18.08.2023  அன்று கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் தலைமை காவலர் செந்திவேல் முருகேயன் ஆகியோர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் மற்றொரு நபரான தூத்துக்குடி எட்டையாபுரம் சிங்கிலிபட்டி பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் சக்கையா (54) என்பவரை கடந்த 07.09.2023 அன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • Share on

தூத்துக்குடியில் பைக்கில் ஆடு திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி அருகே கோழி திருடிய ரவுடி கைது

  • Share on