தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோட்டைசாமி (32) என்பவருக்கு சொந்தமான ஆடு கடந்த 07.09.2023 அன்று அவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்தபோது, அங்குவந்த மர்ம நபர்கள் மேற்படி ஆட்டை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கோட்டைசாமி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்ககுமார் (22) மற்றும் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (20) ஆகியோர் மேற்படி கோட்டைசாமியின் ஆட்டை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் தங்ககுமார் மற்றும் ஜெகன்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட தங்ககுமார் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி ஜங்ஷன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 11 வழக்குகளும், ஜெகன்ராஜ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.