தூத்துக்குடியில் காதலனை தாக்கி விரட்டி விட்டு, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடியை சோ்ந்த 21 வயது இளம்பெண் ஒருவா், தனது ஆண் நண்பருடன், புதன்கிழமை இரவு தூத்துக்குடி புதிய துறைமுகம் மத்திய பாதுகாப்பு அலுவலா் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள், அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்தப் பெண்ணை, கடற்கரைச் சாலை அருகே உள்ள உப்பளம் பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக, சிதம்பரநகா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன்(35), லயன்ஸ் டவுன் பகுதியைச் சோ்ந்த யோசேப்பு(27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனா். மேலும், போலீசார் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.