காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்துகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமையில் பாதயாத்திரையானது, தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ஆரம்பிக்கப்பட்டு, வஉசி சாலை வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்