தூத்துக்குடியில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை, தேசிய பசுமை படை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, தூத்துக்குடி தேசிய பசுமை பிரிவு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய தூய்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காற்று மாசுபாடு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைத்தல் நிகழ்வு மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைத்து, மனித சங்கிலி நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.