விளாத்திகுளம் அருகே காப்பர் வயர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருசம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் ராமகிருஷ்ணன் (43) என்பவருக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள ஆற்றுபடுகையில் அவரது தோட்டத்தில் கடந்த 03.09.2023 அன்று தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் வயர்கள் திருடு போயுள்ளது.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், விளாத்திகுளம் பங்களா தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் வின்சென்ட் (21), கீழவிளாத்திகுளம் பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் பிரதீப் (27) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி ராமகிருஷ்ணனின் தோட்டத்தில் இருந்த 100 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்களை இருசக்கர வாகனத்தில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வின்சென்ட் மற்றும் பிரதீப் ஆகிய 2 பேரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், மேலும் அதே பகுதியில் சுந்தரராஜ் மற்றும் போத்தையா ஆகியோரின் தோட்டத்திலிருந்து மொத்தம் 80 மீட்டர் காப்பர் வயர்களை திருடியதும் தெரியவந்தது.
மேற்படி நபர்களிடமிருந்து மொத்தம் ரூபாய் 32,000 மதிப்புள்ள 180 மீட்டர் நீளமுள்ள காப்பர் வயர்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.