• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பைக்கில் கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

  • Share on

தூத்துக்குடியில் பைக்கில் கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நடராஜன் (25) என்பவரது சகோதரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, இவரது நண்பர்களான தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த சாமுவேல் மகன் தவசிமணி (24), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் கண்ணன் (23) மற்றும் சிலர் இந்த நிகழ்ச்சியின் போது நடனமாடியுள்ளனர். அப்போது நடராஜனுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  தவசிமணி, சுரேஷ் கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து நடராஜனை கடந்த 03.09.2023 அன்று இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று கத்தி மற்றும் கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மீண்டும் அவரது வீட்டின் முன்பு இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குபதிவு செய்து தவசிமணி மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் நடைபெற்றது - தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் ரோந்தில் சிக்கிய ரவடி - கஞ்சாவோடு பிடிபட்டார்

  • Share on