மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடி பனை விதைகள் நடும் பணி சம்மந்தமாக தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பாக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் உதய சூரியன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில துணை பொதுச்செயலாளர் காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணி பிச்சை, தமிழ்நாடு பனைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தாமோதரன், பனை வாரிய உறுப்பினர்கள் அண்டோ பிரைட்டன், எடிசன், பனை விழிப்புணர்வு இயக்கத் தலைவர் ராஜ்கமல் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர்.
நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமார், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வகணேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.