தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பனை விதைகள் நடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை ( செப்.,5 ) நடைபெறுகிறது.
இது தொடர்பாக சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடுவது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 163 கிலோமீட்டர் தூரம் 15 லட்சம் பனை விதைகள் நடுவது சம்பந்தமாக நாளை ( 5.09.2023 ) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு, தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் வைத்து எனது ( மாலைசூடி அற்புதராஜ் ) தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரிய தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.