• vilasalnews@gmail.com

ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மீது தாக்குதலா? மருத்துவமனையில் அனுமதி!

  • Share on

தனியார் காற்றாலை ஊழியர்கள் தன்னை தாக்கியதாக ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தர்ராஜ், தற்போது அவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் தலைமை கழக அமைப்பு செயலாளராக உள்ளார். 

இந்நிலையில்,  ஓட்டப்பிடாரம் பகுதியில்  செம்கார்ப் (Semcorp) என்ற தனியார் காற்றாலை நிறுவனத்தினர், விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் நீரோடை பாதைகளை  ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைத்து வருவதாகவும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு  ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ்  புகார் அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று ( செப்.,2 ) ஓட்டப்பிடாரம் பகுதியில் அந்த தனியார் காற்றாலை நிறுவனம் பொது பாதைகளை ஆக்ரமித்து சிமெண்ட் சாலை அமைத்து வருவதையை அறிந்து, முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ்  அப்பகுதிக்கு நேரில் சென்று தடுக்க முற்பட்ட போது, காற்றாலை நிறுவன ஊழியர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக இன்று ( செப்.,3 ) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

முன்னாள் எம்எல்ஏ தாக்கினாரா? தாக்குதலுக்கு ஆளானாரா? பரபரக்கும் ஓட்டப்பிடாரம்

தூத்துக்குடியில் பனை விதைகள் நடுதல் ஆலோசனை கூட்டம்!

  • Share on