• vilasalnews@gmail.com

மழையினால் பயிர்கள் சேதம் : நஷ்ட ஈடு வழங்க கிராம மக்கள் கோரிக்கை

  • Share on

விளாத்திகுளம் பகுதியில் பெய்த மழையினால் சேதாரமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக, ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரகுராமர், தலைமையில் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு:

விளாத்திகுளம் வட்டம், ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம் தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய ஊர்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெய்து வரும் பெருமழையால் சுமார் 800 ஹெக்டேர் உளுந்து, பாசிப்பயிறு, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம் மற்றும் மிளகாய், வெங்காயம், கம்பு போன்ற பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது. மேலே குறிப்பிட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் சிறுகுறு விவசாயிகளின் நிலங்களை ஆய்வு செய்து நஷ்ட ஈடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

  • Share on

இலவச மடிக்கணினி கேட்டு மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டம்

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் சி.த.செல்லப்பாண்டியன்

  • Share on