• vilasalnews@gmail.com

திருச்செந்தூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • Share on

திருச்செந்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் போலீசார் கடந்த 31.08.2023 அன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலந்தலை, சூசைநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பெரியதாழை பகுதியை சேர்ந்த சக்கிரியாஸ் மகன் லயோ (33) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் லயோவை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட லயோ மீது ஏற்கனவே திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குலசேகரன்ப்பட்டினம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

செப்.4ல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை!

முன்னாள் எம்எல்ஏ தாக்கினாரா? தாக்குதலுக்கு ஆளானாரா? பரபரக்கும் ஓட்டப்பிடாரம்

  • Share on