• vilasalnews@gmail.com

செப்.4ல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 4ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா்.

இது குறித்து அமைச்சா்கள் கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதா கிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை : 

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கொள்வதற்காக வரும் 4ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா். மாலை 3 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவருக்கு விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். 

பின்னா், மாலை 4.30 மணிக்கு, தூத்துக்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறாா். மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை பிரதானச் சாலை அருகே நடைபெறும் இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். இந்த நிகழ்வுகளில், கட்சி நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சாா்பு அணி நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனா்.

  • Share on

தூத்துக்குடியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்

திருச்செந்தூரில் கஞ்சா வைத்திருந்தவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!

  • Share on