முத்தையாபுரம் அருகே போலீஸ்காரரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ரமேஷ் மற்றும் போலீசார் எம். சவேரியார்புரம் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முள்ளக்காடு ராஜீவ் நகர் 7-வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் முகேஷ் (வயது 20) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில் ஆத்திரமடைந்த முகேஷ் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.