கோவில்பட்டியில் இருந்து காமநாயக்கன்பட்டி, போடுபட்டி வழியாக புங்கவர்நத்தத்திற்கு மீண்டும் அரசு பேருந்து இயக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து காமநாயக்கன்பட்டி, போடுபட்டி வழியாக புங்கவர்நத்தத்திற்கு தினமும் காலை, மதியம், மாலை வேளைகளில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்து மூலம்தான் கோவில்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் சென்று வந்தனர்.
இந்நிலையில் காமநாயக்கன்பட்டி, போடுபட்டி வழியாக புங்கவர்நத்தத்திற்கு செல்லும் வழியில் சாலைப் பணி நடைபெற்றதையடுத்து தற்காலிகமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சாலைப் பணிகள் முடிவடைந்ததால் இன்றிலிருந்து (31.08.2023) மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.