விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குப்பை சேகரிக்கும் புதிய மின்னணு வாகனங்கள் நீண்ட நாட்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிராம ஊராட்சிகளுக்கு வழங்க உள்ள, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 39 மின்னணு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாத கணக்கில் கிடப்பில் போடப்பட்டு காட்சி பொருளாக கிடக்கிறது. இவ்வாறு கிடக்கும் வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்திடல் வேண்டும் இல்லையென்றால் அவை உபயோகத்திற்கு லாயகற்ற நிலைக்கு ஆளாகிவிடும்.
இந்த வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்காமல் ஏன் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது ?யாருக்காக காத்துகிடக்கிறது? இவ்வாறு கிடப்பில் போடப்பட்டு கிடப்பதால் பாழாய் போகும் நிலை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்பது போன்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுமக்களின் நலனுக்காக போய் சேர வேண்டிய திட்டத்தின் பயன்கள், இப்படி காலம் தாழ்த்தி கடத்தி போவது, திட்டங்களின் பயன்களை நீர்த்து போகும் செயலாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.