• vilasalnews@gmail.com

தூத்துகக்குடியில் மதுபோதையில் வீட்டு சுவரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

  • Share on

தூத்துகக்குடியில் மதுபோதையில் வீட்டு சுவரில் இருந்து தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 49). மீனவர். சம்பவத்தன்று இவர் மதுபோதையில் வீட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்தாராம். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

தூத்துக்குடி லாரி செட் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

காட்சி பொருளாக கிடக்கும் குப்பை சேகரிக்கும் மின்னணு வாகனங்கள் - யாருக்காக காத்திருக்கிறதோ?

  • Share on