தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலில் ஒரு வாரமாக கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக மருத்துவர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் தினமும் செல்கிறார்கள். ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்த கழிவுநீர் மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள கழிவறையில் இருந்து கிழே இறங்கும் பைப் லைன் உடைப்பில் இருந்து கசிவு ஏற்பட்டு கழிவு நீர் வழியதாக தெரிகிறது.
இது குறித்த பொதுமக்களின் கோரிக்கையும், ஊடகத்தில் செய்தியும் வெளியான நிலையில், உடனடியாக குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தேங்கியிருந்த கழிவு நீர் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேற்று 24.08.2023 இரவு நேரில் சென்று பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் அவர்கள் ஆகியோர் இருந்தனர்.